தவறான தொடர்பினால் கர்ப்பமான மகளை சுட்டுக் கொன்ற தாய்

துருக்கியில் தவறான தொடர்பால் கர்ப்பமான மகளை தாயே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிக்டே நகரில் உள்ள செல்கக் மாவட்டத்தில் கேஷியராக பணிபுரிந்து வரும் 17 வயது பெண் மெர்யம். இவர் தன் வீட்டிற்கு அருகிலுள்ள நபர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் 3 மாதம் கர்ப்பமடைந்துள்ளார். இது அவரது தாயான எமினுக்கு தெரிய வரவே மகளின் நடவடிக்கையால் ஆவேசமடைந்த தாய், அவளிடம் நடந்ததைப் பற்றி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல், ஆத்திரத்தில் துப்பாக்கியால் 5 முறை சுட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மெர்யமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மெர்யம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் எமினை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவரோ நரம்புக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply