ஏமனில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: கார் வெடிகுண்டு தாக்குதல்களால் 31 பேர் பலி
ஏமன் நாட்டில் அரசுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படையினர் கடந்த 2 மாதங்களாக போரிட்டு வருகின்றனர். ஈரானின் துணையுடன் கிளர்ச்சியாளர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வப்பொழுது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், இருதரப்பினர் இடையே சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். ஏமனில் தங்கியிருந்து வேலைசெய்து வந்த வெளிநாட்டை சேர்ந்தவர்கள், தாயகம் திரும்பி விட்டனர்.
ஏமனில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தலைநகர் சானா, ஏடன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து கிளர்ச்சியாளர்களை விரட்ட சவுதி அரேபிய கூட்டுப்படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் ஷியா பிரிவினரின் மசூதிகள் உள்ள இடத்தில், நேற்று ஐ.எஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய 5 கோரமான குண்டு வெடிப்புகளால் 31 பேர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
ஹவுத்தி ஆதரவாளர்கள் அதிகம் உள்ள ஹயல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அல்-குபா அல்-கத்ரா மசூதி, அல்-ஜிரா மாவட்டத்தில் உள்ள அல்-கிப்ஸி, மற்றும் அல்-தயாசிர் மசூதிகளிலும், மேலும் ஒரு வீட்டின் மீதும் கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply