புனித நோன்பு நாளை ஆரம்பம் ஸாதிக் ஷிஹான்
ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்தி ற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத் திலும் தென்படாத தால் இன்று ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை ரமழான் முதல் நோன்பை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியன இணைந்து கூட்டாக ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
இந்த மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply