600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருணாவிடம் விசாரணை
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும் விடுதலைப் புலிகள் யக்க முன்னாள் கிழக்கு பகுதி தளபதியுமான கருணாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1990ம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாணத்தில் 600 போலீஸார் கொல்லப்பட்டனர். இந்நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றை அமைந்துள்ளார்.
அந்த குழு இந்த விசாரணைகளை செய்து வருகிறது. இந்நிலையில், 600 போலீஸார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை விரைவுபடுத்துமாறு ஓய்வுபெற்ற போலீஸார் சங்கம் அதிபருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply