சுட்டு கொல்வதற்கு முன்பு பின்லேடனை பாகிஸ்தான் உளவுதுறை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது: புதிய தகவல் அம்பலம்
பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை கடந்த 2011–ம் ஆண்டு அமெரிக்க கமாண்டோ படையினர் சுட்டுக் கொன்றனர். அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் நீண்ட நாட்களாக பின்லேடன் பதுங்கி இருந்ததாகவும், இந்த தகவல் தெரிந்து அமெரிக்க கமாண்டோ படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இப்போது அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் செய்மார் ஹர்ஷ் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் பின்லேடனை அமெரிக்க கமாண்டோ படையினர் திடீரென கண்டுபிடித்து கொல்லவில்லை. பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பு 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஐ.எஸ். உளவுப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தான். அவனை அவர்கள் அபோதாபாத்தில் சிறை வைத்திருந்தனர்.
கொல்லப்படுவதற்கு முன்பு பின்லேடனை பாகிஸ்தான் உளவுப்படையினரே அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றது. அவரது உடலை சல்லடையாக்கி பின்னர் துண்டு துண்டாக வெட்டினார்கள். அதன் சதை பகுதியை பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார்கள்.
அதன் ஒரு பகுதியை இந்துகுஸ் மலையில் வீசினார்கள். பின்லேடனை உடலை கடலில் அடக்கம் செய்ததாக கூறப்பட்டது பொய்யான தகவல்.
பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக பாகிஸ்தான் உளவு படையை சேர்ந்தவர்கள் 150 கோடி ரூபாய் பரிசு பணம் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்த தகவல்களை பாகிஸ்தான் உளவு நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலரிடம் இருந்து பெற்றதாக அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply