வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில்

வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. மூன்று தூதரகங்களில் கடமையாற்றி வரும் அரசியல் பிரிவு அதிகாரிகளினால் இந்தக் கண்காணிப்பு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கண்காணிப்பு பணிகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களினது செயற்பாட்டாளர்களது ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அண்மையில் கொழும்பின் உயர் ரக கேளிக்கை விடுதியொன்றில் சந்தித்த இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply