ஐ.எஸ். தீவிரவாதிகள் 431 பேர் கைது சவுதி அரசு அதிரடி நடவடிக்கை
ஈராக் மற்றும் சிரியாவில் தடம் பதித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம், அரபு நாடுகளில் காலூன்ற முயற்சித்து வருகிறது. இதனை முறியடிக்க அந்த நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபிய அரசு கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கை எடுத்து, அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் அமைப்பை கண்டுபிடித்து முறியடித்தனர்.
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதிகள், தூதரகங்கள் மீது நடக்க இருந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு விட்டதாக சவுதி அரசின் உள்துறை மந்திரி தகவல் வெளியிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply