மாணவி குத்திக்கொலை டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கெஜ்ரிவால் அரசு உத்தரவு ‘2 நாளில் அறிக்கை வேண்டும்’
டெல்லியை சேர்ந்தவர் மீனாட்சி. 11–ம் வகுப்பு மாணவி. இவரை ஜெய்பிரகாஷ், அஜய் என்னும் 2 சகோதரர்கள் பின்தொடர்ந்து சென்று, கிண்டல் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 16–ந் தேதி மீனாட்சி, தன் தாயாருடன் மத்திய டெல்லியில் உள்ள சந்தைக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, இரு சகோதரர்களும் வழக்கம்போல கேலி, கிண்டல் செய்தனர். இதற்கு மீனாட்சி எதிர்ப்பு தெரிவித்தபோது, ஆத்திரம் அடைந்த அவர்கள் மீனாட்சியை கத்தியால் 35 முறை குத்தி ரத்த வெள்ளத்தில் சரிய வைத்தனர். இதைத் தடுக்க முயன்ற அவரது தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. சுமார் 50 பேர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தபோதும் மற்ற யாரும் தடுக்க முன்வரவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீனாட்சி உயிரிழந்தார்.
ஆனால் அந்த மாணவி, தன்னை ஜெய்பிரகாஷ், அஜய் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தபோது பல முறை புகார் செய்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாகவும், மாணவி புகார்கள் அளித்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது குறித்தும் 2 நாளில் விரிவான விளக்க அறிக்கை அளிக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸிக்கு
கெஜ்ரிவால் அரசின் உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply