தேர்தல் வெற்றியின் பின்னர் சுயாட்சி முறைமை ஏற்படுத்தப்படும்!- இரா. சம்பந்தன்
தேர்தல் வெற்றியின் பின்னர் சுயாட்சி முறைமை ஏற்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பாரிய வெற்றியை பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் சுயாட்சி முறைமை உருவாக்கப்படும். சுயாட்சியை ஏற்படுத்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த இலக்கை அடையும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகவே வடக்கு கிழக்கிற்கு வெளியே பெருமளவு தமிழ் மக்கள் வாழ்ந்த போதிலும் அந்தப் பகுதிகளில் போட்டியிடவில்லை.
கொழும்பு மாவட்டத்தில் பெருமளவு வடக்கு கிழக்கு வாழ் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும் வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகார முறைமை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு போட்டியிடவில்லை என அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் சம்பந்தன் கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிங்களப் பேரினவாத கருத்துக்களை திணிக்கும் வகையில் இந்த ஊடகம் செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply