மஹிந்தவின் கூட்டத்துக்கு அரசாங்க நிதி! விசாரணைகள் ஆரம்பம்
கடந்த டிசம்பரில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களின் போது அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விசேட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த விசாரணைகள் ஆரம்பமாகின. எனினும் இன்னும் உரிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 600க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில், இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டத்தை முன்னாள் அமைச்சர் சரத்குமார குணரட்ன ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக்கூட்டத்துக்கான பிரசுரங்களுக்காக 1.25 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன. கூட்டத்துக்காக மொத்தமாக 5 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply