நைஜீரியாவில் 10 மீனவர்களின் கழுத்தை அறுத்தக்கொன்ற போகோ ஹராம் தீவிரவாதிகள்
நைஜீரியாவில் 10 மீனவர்களின் கழுத்தை அறுத்து போகோ ஹராம் தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மூன்று கடற்கரை கிராமங்களில் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள், அங்கிருந்த 10 மீனவர்களை பிடித்து அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இந்த தகவல் உள்ளூர் மீனவர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், போகோ ஹராம் தீவிரவாதிகள் இன்று மாலை 4 மணி அளவில் மூன்று கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் மீனவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த தாக்குதலில் அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. எனவே இத்தாக்குதல் குறித்து ராணுவ வீரர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அப்பாவி கிராம மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply