முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிராக புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. 

அதிபர் தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்துகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய 14 கோடி ரூபாயை கேட்டு, ராஜபக்சே உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த இவர்களுக்கு எதிராக கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அநுர பிரயதர்ஷன யாப்பா, காமினி செனரத் மற்றும் அமல் சேனாதிலங்கார உள்ளிட்ட ஏழு பேர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply