சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வு பொலனறுவையில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வு பொலனறுவையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி, ஜனாதிபதியும் கட்சியின் தலைருவமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக பொலனறுவை மாவட்டத்தில் கட்சியின் ஆண்டு நிறைவு நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வுகளை நடாத்த தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர்களான டி.எம். ஜயரட்ன, ரட்னசிறி விக்ரமநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக அநேகமான முக்கிய நிகழ்வுகள் ஜனாதிபதியின் சொந்த ஊரான பொலனறுவையில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply