ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதை மோதலில் ஈடுபட்டு கொண்டாடியுள்ளார்.
ஹிஸ்புல்லாவிற்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் முகமாக அவர் அவருடைய தொகுதியான காத்தான்குடியில் மேதலில் ஈடுபட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த மோதல் சம்பவத்தினால் 03 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு கர்ப்பிணத் தாய் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்றதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக மேலதிக பொலிஸ் குழுவொன்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டடது.
அதேபோல் தேர்தல் காலத்தில் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக காத்தான்குடியில் மட்டும் ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது.
இதுவரை தேர்தலின் பின்னரான காலத்தில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் கபே அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply