வடகொரியா மன்னிப்பு கேட்கவேண்டும்: தென்கொரிய அதிபர் வலியுறுத்தல்
கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வடகொரியா மன்னிப்பு கேட்கவேண்டும் என தென்கொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார். இரு கொரிய நாடுகளுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது போர் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும் தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக இருநாட்டு எல்லையின் குறிப்பிட்ட பகுதிகளில் ராணுவத்தை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் முன்வந்தன. இந்நிலையில், இப்பகுதிகளில் வடகொரிய ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததாகவும், அதனால் தென் கொரிய ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்கவேண்டும் என தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹே வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply