வேலை நிறுத்தங்களுக்கு அடிபணியேன் : அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
மக்களை அசெளகரியத்துக்குள்ளாக் கும் வேலை நிறுத்தங்கள் போன்ற வற்றுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென புதிய போக்குவரத்து
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தொழிற் சங்கங்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பதிலாக பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்து சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சராகப் பணிகளை ஆரம்பித்த நிமல் சிறிபால டி சில்வா, 37,000 போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு கடந்த மாதம் செலுதப்படாத சம்பளத்தை செலுத்து வதற்கான ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டு நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்தார். மாதந்தோறும் திறைசேரியிடம் இருந்து சம்பளம் செலுத்த பணம் பெறுவதை நிறுத்தி ஒரே முறையில் நிதி பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டார்.
மாதந்தோறும் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் சம்பளத்துக்காக 994 மில்லியன் ரூபா செலவாகிறது.
இது தேசிய அரசாதலால் அரசியல் வேறுபாடுகள் இன்றி சகலரும் ஒன்றுபட்டு ரயில்வே, போக்குவரத்துச் சபை ஆகிய நிறுவனங்களை முன்னேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தவறு இழைப்போர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஊயர்களின் நியாயமான கோரிக்கைகள் விடயமாக ஆழ்ந்த கவம் செலுத்தப்படும்
அச்சுறுத்தல்கள் மூலம் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். மக்களை அசெளகரியத்துக்கு உள்ளாக்கும் வேலை நிறுத்தங்கள் போன்றவற்றுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்க வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை வெற்றி கொள்வதும் மட்டும் அவர்களின் கருத்தாக இருக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply