குடியேறிகளுக்கு உதவ போப் கோரிக்கை

குடியேறிகள்pop-francis பிரச்சினையை தீர்க்க உதவுமாறு ஐரோப்பா முழுவதும் உள்ள ரோமன் கத்தோலிக்கர்களிடம் போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள். குடியேறிகள் பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு ஐரோப்பா முழுவதும் உள்ள ரோமன் கத்தோலிக்கர்களிடம் போப் பிரான்ஸிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பாவில் உள்ள ஓவ்வொரு திருச்சபையும், ஒவ்வொரு மதச் சமூகமும் மற்றும் சரணாலயங்கள் ஒவ்வொன்றும் குடியேறிகளாக வரும் குடும்பங்கள் ஒன்றுக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அவ்வகையில் வத்திக்கானில் உள்ள இரண்டு திருச்சபைகள், இரண்டு குடும்பங்களை ஏற்றுகொள்ளும் என போப் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இஸ்ரேலில், சிரிய நாட்டுக் குடியேறிகளுக்கு தஞ்சம் வழங்குமாறு இஸ்ரேலிய எதிர்க்கட்சி விடுத்த அழைப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

 

இஸ்ரேல் மனிதப் பேரவலத்தின் போது உதவாமல் நிற்கும் நாடு அல்ல என வலியுறுத்திய அவர், ஆனாலும் நாடு அவர்களை உள்ளே அனுமதிக்கும் அளவு பெரியது அல்ல என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply