காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு நவாஸ் ஷெரிப் யோசனை

pak_pm_sharifஇந்தியாவுடன் சுமூகமான உறவை நாடுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் மற்றும் சியாச்சின் பகுதிகளிலிருந்து ராணுவத்தை இந்தியா விலக்கிக்கொள்வது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற பொது விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய நவாஸ் ஷெரிப், தீவிரவாதம், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பினார்.

 

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இன்னமும் காணாமல் உள்ளதை சுட்டிக்காட்டிய ஷெரிப், இதற்கு தீர்வுகாண்பதில் ஐநா தோல்வியடைந்துள்ளதாகவும் குறை கூறினார்.

 

மேலும், இந்தியாவுடன் சமாதானமாக செல்லவே பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ள ஷெரிப் , இதற்காக, அமைதிக்கான 4 அம்ச கோரிக்கைகளை முன்மொழிய கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

முதலாவதாக, 2003 ஆம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து இருநாடுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், இதற்காக ஐநா கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

இரண்டாவதாக, எல்லைகளில் இருநாடுகளும் தங்கள் படைகளை நிறுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஷெரிப் தெரிவித்தார்.

 

மூன்றாவதாக, காஷ்மீரில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், நான்காவதாக சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை நிபந்தனையின்றி திரும்பப்பெற இருநாடுகளுன் உறுதியளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

மேலும், அமைதியை விரும்புவதாக தெரிவித்த நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானுக்கு முதல் எதிரி வறுமையும், வளர்ச்சியின்மையும் தான் என்றார்.

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply