எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்
எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இரண்டாவது நிகழ்வாக இன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்த்தினவிழா. இதில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply