சிறுவர்களை பாதுகாக்க சட்டங்களை பலப்படுத்த வேண்டும் : ஜனாதிபதி
சிறுவர்களை பாதுகாப்பதற்கு சட்டங்களை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் , சிறுவர் சிறுமியரை பாதுகாப்பதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரும், சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிறுவர்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் துர்பாக்கியமானவை எனவும், குறித்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply