காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் : சயிட் அல் ஹுசைன்

unoகாணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், கண்காணிப்பாளர்களும் பாரதூரமான கேள்விகளை எழுப்பி வருவதாகவும். இவ்வாறான பின்னணியில் ஆணைக்குழுவின் பணிகளை முன்னெடுப்பதில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனான ஓர் விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பு நிலைமை குறித்து காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், நம்பகமானதும் சுயாதீனமானதுமான ஓர் விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக காணாமல் போனவர்கள் குறித்த சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply