இனபேதம் பார்க்கும் இங்கிலாந்து ஓட்டலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
லண்டனின் பிக்கடெல்லி பகுதியில் உள்ள ஆடம்பர உணவகத்தில், நுழைய முற்பட்ட இரு பெண்கள் கருப்பாகவும், குண்டாகவும் உள்ள காரணத்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறப்பு நள்ளிரவு விருந்துகள் நடைபெறும் இந்த உணவகத்துக்கு தோழிகளுடன் வந்த (வெள்ளை) பெண் மட்டும் உள்ளே போகலாம் எனவும், மற்றவர்கள் மிகக் கருப்பாகவும், குண்டாகவும் இருப்பதால் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார் என நுழைவாயிலில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தக் கொடுமையை தனது சமூக வலைத்தள பக்கத்தில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் பகிர்ந்தார். உடனடியாக அவருக்கு ஆதரவாக பல பெண்கள் உணவகத்தின் முன் வந்து குவிந்து, பேனர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உணவகத்தின் இந்த மோசமான செயலால், அவர்களது நிறுவனங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply