4 அம்ச திட்டமெல்லாம் வேண்டாம், ஒன்றே ஒன்றுதான் பயங்கரவாதத்தை கைவிடுங்கள்: ஐ.நா சபையில் சுஷ்மா
ஐ.நா சபையில் சில தினங்களுக்கு முன் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கும், இந்தியாவுடன் சுமூகமான உறவு நீடிப்பதற்கும் 4 அம்ச திட்டத்தை முன்வைத்த நிலையில், அந்த 4 அம்ச திட்டங்களை நிராகரித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். என்று ஐ.நா.வில் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, “ஐ.நா. பொதுச்சபையில் புதன்கிழமை உரையாற்றியபோது, அமைதிக்கான 4 அம்ச திட்டங்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டார். அந்த 4 அம்ச திட்டமெல்லாம் தேவையில்லை. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட்டாலே போதும்.” என்று சுஷ்மா கூறினார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட முடியாது. பயங்கரவாதம் என்றால் பயங்கரவாதம்தான். அதில் நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் கிடையாது.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தரமாட்டோம்; பயங்கரவாதிகளை ஒழிப்போம் என முன்னர் அளித்த வாக்குறுதிக்கு
சாதகமான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்குமானால், அனைத்துப் பிரச்னைகளையும் பேசித் தீர்க்க இந்தியா தயாராகவே இருக்கிறது. என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply