பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 25 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தான்air-atact-ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் கண்டிப்பின் காரணமாக அங்கு பாகிஸ்தான் அவ்வப்போது தனது படையின் மூலம் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது.

 

இந்த நிலையில், அங்கு இரு நாட்டு எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கருதப்பட்டு வந்த பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதலில் 25 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 6 மறைவிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply