எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிய பெண் மரணம் ஜப்பானை சேர்ந்தவர்

Japan ஜப்பானின் புகுஷிமாவை சேர்ந்தவர் ஜங்கோ தபேய். உயரமான மலைச்சிகரங்களில் ஏறி சாகசம் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த 1975–ம் ஆண்டு எட்டிப்பிடித்தார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.  அதைத்தொடர்ந்து உலகின் 7 உயர்ந்த மலைச்சிகரங்களில் ஏறிய முதல் பெண்மணி என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார். தற்போது 77 வயதான தபேய் கடுமையான புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தார். 

 

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது குறித்து கடந்த 2012–ம் ஆண்டு தபேய் அளித்த பேட்டியில், ‘1970–க்கு முந்தைய காலகட்டங்களில் ஜப்பானில் ஆண்கள்தான் வெளியில் பணியாற்ற வேண்டும், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற ஒரு சூழல் இருந்தது. ஆனால் எவரெஸ்டை அடைய வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கேள்வியும் என் மனதில் அப்போது இல்லை’ என்று கூறியிருந்தார்.

 

மேலும் எவரெஸ்டை அடைவதற்காக தபேய் தனது 3 வயது மகளை கணவர் மற்றும் உறவினர்களிடம் விட்டு விட்டு தனியாக எவரெஸ்டுக்கு பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply