சிரியாவில் நடத்திய துல்லியமான தாக்குதலில் அல்கொய்தா மூத்த தலைவர் பலி அமெரிக்கா அறிவிப்பு

alheidaசிரியாவில் நடத்திய துல்லியமான தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவரான அல் மாஸ்ரி சிக்கி பலியாகி விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் 6-வது ஆண்டாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் படைகளுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களம் இறங்கி தாக்குதல் நடத்துகின்றன. இதற்கிடையே அங்கு பதுங்கியுள்ள அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினர் மீது அமெரிக்கா தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி, அவர்களின் கொட்டத்தை அடக்கி வருகிறது.

 

இந்த நிலையில் அங்கு இத்லிப் மாகாணத்தில் சர்மதா என்ற இடத்துக்கு அருகே கடந்த 18-ந் தேதி அமெரிக்கா நடத்திய துல்லியமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அல் மாஸ்ரி சிக்கி பலி ஆனார். இவரது பூர்விகம் எகிப்து ஆகும்.

 

முதலில் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்து, அதன் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்னர் அவர் சிரியாவுக்கு சென்றார். அங்கு அதனோடு இணைந்த அமைப்பினருடன் சேர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்தார்.

 

பயங்கரவாத குழுக்களுக்கு விழுந்த அடி

 

அல் மாஸ்ரி, ஜபாத் பட்டே அல் ஷாம் அமைப்பில் மத நீதிபதியாகவும் பணியாற்றியவர். இந்த ஜபாத் பட்டே அல் ஷாம் அமைப்புதான் முதலில் அல் நுஸ்ரா முன்னணி என அறியப்பட்டிருந்தது.

 

அல் மாஸ்ரி கொல்லப்பட்டதை பென்டகன் அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் வெளியிட்டார். இது பற்றி அவர் குறிப்பிடும்போது, “தென்மேற்கு ஆசியா முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் அல் மாஸ்ரிக்கு தொடர்பு உண்டு. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலும், மேற்கத்திய நாடுகளில் தாக்குதல்கள் நடத்தி வந்த குழுக்களிலும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அல் மாஸ்ரி போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பது, அல் கொய்தா மற்றும் சிரிய பயங்கரவாத குழுக்களுக்கு விழுந்த அடியாகும். அமெரிக்காவுக்கும், கூட்டு படைகளுக்கும் அச்சுறுத்தலாக திகழ்ந்து கொண்டிருக்கிற அல்கொய்தா தலைவர்கள் அனைவரையும் குறிவைத்து கொல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது” என்று கூறினார்.

 

 

 

சிரியா, ஈராக் நாடுகளில் துல்லியமான தாக்குதல்கள் நடத்தி பயங்கரவாதிகளை அழிப்பது அமெரிக்காவுக்கு புதிது அல்ல.

 

கடந்த மாதம் கூட, இத்லிப் மாகாணத்தில் அல்நுஸ்ரா முன்னணியின் மூத்த தலைவராக திகழ்ந்த அகமது சலமா மாப்ரூக்கை அமெரிக்கா துல்லியமான தாக்குதல் நடத்தி கொன்றது. இவரும் எகிப்து நாட்டினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply