மக்களை அமைதியாக இருந்து பாதுகாப்புத் துறைக்கு உதவுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

பொய்யான செய்திகளையும் வதந்திகளையும் நம்பி பொது மக்கள் தேவையற்றவிதத்தில் பீதியடையாதிருக்குமாறும், அரசாங்கம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து நான் மிகுந்த கவலையடந்துள்ளேன். எந்தவகையிலும் எதிர் பார்க்காத இந்த சம்பவம் தொடர்பில் நான் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் அதிர்ந்து போயுள்ளோம். இந்த சம்பவத்தின் பின்னால் எந்தவகையான சக்தி இருக்கின்றது என்பது குறித்து விசாரணை நடாத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நேரத்தில் மக்கள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, நாட்டிலுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு தேவையான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடாத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply