யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, November 29th, 2025 at 8:02 (SLT)
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 28th, 2025 at 13:34 (SLT)
இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள் /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 28th, 2025 at 13:31 (SLT)
இலங்கையில் பேரிடர் நிவாரண சேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் தகவல்களின்படி அவசர தேவைகளுக்காக கூடுதலாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 30 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, November 28th, 2025 at 13:28 (SLT)
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் இந்த பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, November 28th, 2025 at 13:25 (SLT)
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:40 (SLT)
இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 210 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடையும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து அதாவது நாளையளவில் சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:37 (SLT)
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:35 (SLT)
கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோல் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் 6% என்ற விடயத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:33 (SLT)
சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த மார்க்கங்களில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:29 (SLT)
சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
மேலும் வாசிக்க >>>Thursday, November 27th, 2025 at 9:27 (SLT)
Thursday, November 27th, 2025 at 9:25 (SLT)
பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 26th, 2025 at 8:42 (SLT)
நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மில்லனிய – கெனன்துடாவ வீதியின் ரன்மிணிக வளைவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையில், முச்சக்கரவண்டியில் இருந்த குழந்தையொன்று தலையை வெளியே நீட்டியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனத்தில் குழந்தையின் தலை மோதி விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 26th, 2025 at 8:39 (SLT)
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 26th, 2025 at 6:38 (SLT)
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் (நவம்பர் 25 – 29) மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>