இஸ்ரேலிய தூதரகத்திற்கு கதிரியக்க அச்சுறுத்தல்; லண்டன் பூங்கா மூடல் : பயங்கரவாத கும்பலின் பகீர் வீடியோ

April 19th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லண்டனின் கென்சிங்டன் (Kensington) பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை நோக்கி, புற்றுநோயை உண்டாக்கும் கதிரியக்கப் பொருட்களைச் சுமந்து கொண்டு ட்ரோன்கள் (Drones) பறப்பதாகக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தீவிரவாதக் கும்பல் வெளியிட்ட அந்த வீடியோவில், தூதரகத்தின் வான்வெளியில் ட்ரோன்கள் வட்டமிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் காவல்துறையினர் (Met Police) தூதரகத்திற்கு அருகில் உள்ள பூங்காவை அதிரடியாக மூடிவிட்டு, அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையினர் மீது தாக்குதல்: வீரர் பலி

April 19th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லெபனானில் ஐநா பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் இடையே 10 நாள்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிரம்ப்புடன் பேச எனக்கு விரும்பமில்லை: போப் லியோ அறிவிப்பு

April 19th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானில் நடக்கும் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கத்தோலிக்க மதத்தலைவர் போப் லியோ கடுமையாக விமர்சனம் செய்தார். பதிலுக்கு டிரம்ப்பும் கார்ட்டூன் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் கேமரூனில் இருந்து அங்கோலா சென்ற போப் லியோ கூறுகையில்,’ ஈரானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக டிரம்புடன் விவாதிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

April 19th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், அந்த வழியாக வந்த 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதனை தொடர்ந்து போர் தொடங்கியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் நீர் நிலைகளில் பதிவான விபத்துகளில் 20 பேர் உயிரிழப்பு

April 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 20 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா கொண்டு வர டிரம்ப் மாஸ்டர் பிளான்

April 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) மீட்டு அமெரிக்காவிற்கு கொண்டு வருவது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு இன்று (ஏப்ரல் 17, 2026) தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில், “நாங்கள் ஈரானுடன் இணைந்து மிக நிதானமான வேகத்தில் (Leisurely Pace) உள்ளே நுழைந்து, பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டி அந்த யுரேனியத்தை எடுப்போம்; பின்னர் அதை அமெரிக்காவிற்கு கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கப்பட்ட நிலையில், அங்கு எஞ்சியுள்ள “அணு துகள்களை” (Nuclear Dust) மிக விரைவில் மீட்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கா-ஈரான் இடையே 2வது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்கிறது: அதிகாரிகள் தகவல்

April 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகத் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 11ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லெபனான் -இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறப்பு: அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம், ஈரான் அரசு அறிவிப்பு

April 18th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் தொடங்கியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில் ஈரான் , அமெரிக்கா இடையே இரண்டு வார காலத்துக்கு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் இந்த போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி்யது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிலக்கரி ஊழல் விசாரணை: அமைச்சர் குமார ஜயகொடி, செயலாளர் இராஜினாமா

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கா படையெடுத்தால் தீவைப் பாதுகாப்பதாக கியூபா அதிபர் உறுதி

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா இராணுவத் தாக்குதலைத் தொடங்கினால், கரீபியன் தீவு நாடான கியூபா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று கியூபாவின் அதிபர் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் படையெடுப்பதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் : விகாராதிபதி திட்டவட்டம் விகாரை முன் பொலிஸார் குவிப்பு

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா நிலக்கரி தனியார் நிறுவனம் (Lanka Coal Company (Pvt) Ltd) அல்லது அதன் வழிவந்தவர்களினால் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையிலும் மின் உற்பத்தியின் போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல விஷயங்கள் இயல்பான சூழலை சீர்குலைத்து உள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சொந்த நாட்டு அதிபரையே பயம்மில்லாமல் எதிர்க்கும் போப் லியோ

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கேமரூன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை போப் லியோ, உலக தலைவர்கள் மற்றும் போர்சூழல் குறித்து முன்வைத்துள்ள மிக கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அணுசக்தி தொர்பாக விரைவில் ஈரான் அமெரிக்கா நாடுகளிடையே ஒப்பந்தம் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

April 17th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தங்களிடம் கையிருப்பில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button